வியாழன், 15 டிசம்பர், 2011

கடாபியின் வரலாற்று குறிப்பு


1. அரபு தேசத்தின் கதட்ஃபா (Quadhadhfa) எனும் பூர்வீக குடியினத்தில் 1942ம்

ஆண்டு ஜூன், 7ம் திகதி பிறந்தார். பலஸ்தீன எழுச்சிக்கு மிகுந்த ஆதரவு கொடுத்தார். 1948ம் ஆண்டு இஸ்ரேலிடம் பலஸ்தீனம் தோல்வி அடைந்த போது மிகுந்த மனவேதனை அடைந்தார்.  

2.அப்போதைய எகிப்திய அதிபர் கமல் அப்தெல் நாஸரை தனது ரோல் மாடலாக எடுத்துக்கொண்டார்.

 இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டார். ஐரோப்பாவின் ஐக்கிய இராச்சியத்தில், சில காலம் தங்கியிருந்து பட்டப்படிப்பை மேற்கொண்டார். அவர் இங்கிலாந்தின் சாண்ட்டூர்ஸ்ட் (Sandhurst) இல் உள்ள அரச இராணுவ அகடமியில் பயின்றதாக ஒரு வதந்தி அந்த காலத்தில் படு பிரபலம். தான் பிரபலமாவதற்கு இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டார்.  

3. 1969 அப்போதைய லிபிய அதிபர், கிங் ஐட்ரிஸ் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த போது  இரத்தமின்றி இராணுவ சதி புரட்சி மூலம், ஆட்சியை கைப்பற்றினர். அன்றிலிருந்து, லிபியாவை ஆட்சி செய்தார். 

4. அரச பரம்பரையில்லாதவர்களில் உலகின் மிக நீண்ட கால ஆட்சியாளராக வரலாற்றில் பதியப்பட்டார்.
(ஆட்சிக்காலம் 42 வருடங்கள்)

5. தனது தத்துவவியல் பார்வையை விளக்கும் The Green Book எனும் புத்தகத்தை 1975ம் ஆண்டு எழுதினார். 

6. 1979ம் ஆண்டு தன்னை பிரதமர் என்பதை அழைக்க கூடாது. மாறாக புரட்சியின் வழிகாட்டி. சகோதர தலைவன் என அழைக்க வேண்டும் என கட்டளையிட்டார். மன்னர்களின் மன்னர் எனவும் அவரை அழைத்ததுண்டு.

7. கடாபியின் சர்வாதிகார ஆட்சியினால் லிபியாவை Paraiah State (தாழ்த்தப்பட்ட பிரதேசம்) என மேற்குலகம் அழைக்க தொடங்கியது.

8. எண்ணெய் நிறுவனங்களால் கடாபி சம்பாதித்த மில்லியன் டாலர் சொத்துக்கள் குறித்து டச்லாந்து முதன் முறையாக விசாரணையை ஆரம்பித்தது. ஐரோப்பா முழுவதும் தனது சொத்துக்களை பரவலாக சேமித்து வைத்துள்ளதாகவும் கூறியது.

9. 1986ம் ஆண்டு லிபியாவில் குண்டு வெடித்தது. 1993ம் ஆண்டு ஐ.நா பல பொருளாதார, சமூக தடைகளை லிபியா மீது விதித்தது. இப்பிரச்சினைகளால், மேற்குலகத்துடன் நட்புறவை பேண தொடங்கினார்.  தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் எனும் குற்றச்சாட்டை அடுத்து  விசாரணைகளுக்கு அனுமதித்தார். அணு ஆயுத திட்டத்தை கைவிட்டார். விளைவு 2003 இல் பொருளாதார தடையை நீக்கியது. 

10. ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன் அமெரிக்க படைகளால் பிடிபட்ட 6 வது நாள், தனது பாரிய ஆயுத களஞ்சியங்களை அழித்துவிடுவதாக மீள் அறிவிப்பு செய்ததுடன், அதனை சர்வதேசம் ஆய்வு நடத்தவும் அனுமதித்தார்.

11. ஐக்கிய ஆபிரிக்காவின் (United States Of Africa) ஆட்சியாளராவதற்கு எப்போதும் ஆசைப்பட்டிருந்த கடாபி, 2009-2010 காலப்பகுதியில் ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைவராக இருந்தார்.

12. துனிசியா, எகிப்து நாடுகளில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை அடுத்து 2011 பெப்ரவரி மாதம் கடாபியின் அரசுக்கு எதிரான சிவில் யுத்தம் ஆரம்பமானது. 

13. இப்போராட்டத்தில் வெல்வேன், அல்லது வீரமரணமடைவேன் என சபதமெடுத்தார்.

14. பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா கூட்டுப்படை நேட்டோக்களின் துணையுடன் புரட்சிக்குழு பெங்காஸியிலிருந்து முக்கிய ஒவ்வொரு நகரமாக கைப்பற்ற தொடங்கியது.

15. ஜூன் 27, 2011 சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், கடாபி மற்றும், அவரது மகன்களை கைது செய்வதற்கு பிடி ஆணை பிறப்பித்தது.

16. ஆகஸ்ட், 2011 இல் புரட்சிப்படையிடம் லிபிய தலைநகர் திரிபொலி வீழ்ந்தது. செப்டெம்பர் 16, 2011 இல் இடைக்கால நிர்வாக அரசு, ஐ.நாவில் லிபியாவை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அறிவித்தது.

17.அக்டோபர் 20, 2011 புரட்சிப்படையினரால் சேர்த் நகரில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து அல்லது உயிருடன் பிடிபட்டு பின்னர் மரணமடைந்தார்.



கடாபி எழுச்சியும் வீழ்ச்சியும் - புகைப்பட பார்வை