சனி, 15 பிப்ரவரி, 2014

காதலர் தினத்தில் முக நூலைக் கலக்கிய நளினி முருகன் விசித்திரக் காதல்

முருகன்-நளினி காதலுக்கு வயது 23 வருடங்கள். இதில் சிறையில் பிரிக்கப்பட்டு இருவரும் தனித்திருந்த காலம்… கிட்டத்தட்ட அதே 23 வருடங்கள்! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முருகன்-நளினி ஜோடி, தங்கள் காதலுக்குக் கொடுத்த விலை மிக மிக அதிகம்!

1991 பெப்ரவரி மாதம் இருவருக்கும் இடையிலான முதல் சந்திப்பு. மே மாதம் ராஜீவ் காந்தி கொலை. ஜூன் மாதம் இருவரும் கைதாகிறார்கள். அன்று முதல் இன்று வரை சிறைச் சுவர்களுக்கு இடையில் கிளைத்துக் கிடக்கிறது இவர்களின் காதல்!
முதல் சந்திப்பு முதல் உங்கள் காதல் கதையை விரிவாகச் சொல்லுங்கள்! என்று வழக்கறிஞர் மூலம் வேலூர் சிறையில் இருக்கும் முருகனிடம் பேசியதில் இருந்து… நான் முருகன் அல்ல… தாஸ்
யாழ்ப்பாணம் இத்தாவில் கிராமத்தில் பிறந்தேன். ஓர் அண்ணன், ஓர் அக்கா, மூன்று தம்பிகள், மூன்று தங்கச்சிகள் என நாங்கள் மொத்தம் ஒன்பது பேர்.
1987-ல் மூத்த அண்ணன் புலிகள் அமைப்பில் சேர்ந்து மாவீரர் ஆன பிறகு, நானும் புலிகள் அமைப்பில் சேர்ந்தேன். வீட்டில் எனக்கு வைத்த பெயர், ஸ்ரீகரன். அமைப்பு வைத்த பெயர், இந்து. செல்வராசா மாஸ்டர் எனக்குப் பயிற்சி அளித்தார்.
பயிற்சி முடிந்து புதிய உறுப்பினர்களுக்குப் பயிற்சியாளராகவும், பின்னர் புலனாய்வுப் பிரிவில் விசாரணை அதிகாரியாகவும் வேலை செய்த என்னை, எல்லோரும் ‘இந்து மாஸ்டர்’ என்று அழைப்பார்கள். 1991-ம் ஆண்டு ஜனவரியில் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டேன்.
விடுதலைப் புலிகள் அமைப்பைப் பொறுத்தவரை, நமக்கு அளிக்கப்பட்ட வேலையைச் செய்து முடிக்க வேண்டும். அது தொடர்பான மேலதிகத் தகவல்களைப் பற்றி விசாரிக்கக் கூடாது. தற்கொலைப் போராளிகளாகச் செல்பவர்களுக்குக்கூட யாரைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தப் போகிறோம் என்று தெரியாது.
யாருக்காக நமது உயிரைத் தியாகம் செய்யப் போகிறோம் என்பது தாக்குதல் நாளன்றுதான் தெரிவிக்கப்படும். ஏனென்றால், யாரேனும் ஒருவர் பிடிபட்டால்கூட குழுவினரின் நோக்கத்தை அவர் மூலம் கண்டுபிடித்துவிடக் கூடாது அல்லவா! அதுதான் புலிகள் அமைப்பின் பலம்.
அமைப்பைச் சார்ந்த எவருடனும் பேசக் கூடாது என்ற உத்தரவோடு நான் கடல் வழியே சென்னைக்கு வந்தபோது, எனக்கு வயது 19. சென்னைக்கு வந்தவுடன், ‘தாஸ்’ என்று எனக்கு நானே பெயர் சூட்டிக்கொண்டேன்!
அந்த முதல் சந்திப்பு!
சென்னை நகரம் எனக்குப் புதியது. முடிவற்ற அதன் பரபரப்புக்கு நான் பழக இன்னும் சில காலம் ஆகும் எனும் நிலையில், பாக்கியநாதன் என்கிற தமிழ் ஆர்வலரின் வீட்டில் தங்க வைக்கப்பட்டேன். பாக்கியநாதன், நளினியின் தம்பி. நளினியின் அம்மா பத்மாவுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் (பாக்கியநாதன்). மூத்த பெண்ணான நளினியை நான் அங்கு சென்ற நாட்களில் கண்டதில்லை.
இளையவளையும் பாக்கியநாதனையுமே பார்த்திருக்கிறேன். நளினியின் அம்மாவிடம், ‘உங்கள் மூத்த மகள் நளினி எங்கே?’ என்று கேட்டேன். ‘ஓ..’வென்று கதறி அழுதவர், ‘என்னிடம் கோபித்துக்கொண்டு பெரியம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டாள்’ என்று சொன்னார்.
உங்கள் மகளை உங்களுடன் சேர்த்து வைக்கிறேன்… கவலைப்படாதீர்கள்’ என்று அவரைச் சமாதானப்படுத்தினேன். அந்த அம்மாவின் கண்ணீர்தான், நளினியுடனான என் காதலுக்கு விதையாக இருந்தது.
வார இறுதி நாட்களில் நளினியுடன் தங்கியிருப்பார் அவருடைய தங்கை. அவர் மூலம்தான் நளினி எனக்கு அறிமுகமானார். 1991 பெப்ரவரி 8-ம் தேதி முதன்முதலாக அடையாறில் நாங்கள் சந்தித்தோம். அவரைப் பார்த்தவுடன் இனம் புரியாத ஈர்ப்பு இருந்தது. ஆனால், அதைக் காதல் என்று சொல்ல முடியாது.
அன்றைய தினம் எனது பிறந்த நாள் என்று தெரிந்தவுடன், என்னோடு வந்திருந்த அனைவரையும் அழைத்துச் சென்று எளிமையான ஒரு விருந்தை எனக்குப் பரிசாக அளித்தார். நான் எப்போதுமே என் பிறந்த நாளைக் கொண்டாடியது இல்லை. யுத்தக் களத்தில் அதற்கான வாய்ப்புகளும் இல்லை. ஆனால், நளினி என் பிறந்த நாளைக் கொண்டாடச் செய்தது எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது.
நளினியை எப்படியாவது அவருடைய தாயாருடன் இணைத்துவைக்க வேண்டும் என்ற நோக்கமும், நளினியைக் காண வேண்டும் என்ற இயல்பான எண்ணத்திலும் நான் அன்றாடம் சைக்கிளை எடுத்துக்கொண்டு அடையாறு செல்லத் தொடங்கினேன்.
பணியில் இருந்து அவர் வரத் தாமதமானால், காத்திருந்து அவருடன் பேசிவிட்டு அவரைப் பேருந்து ஏற்றிவிட்டு மீண்டும் ராயப்பேட்டைக்குத் திரும்புவேன். பேசும்போது பணியிடங்களில் தனக்கு சில ஆண்களால் ஏற்பட்ட தொல்லையால் வேலை இழக்க நேரிட்டதையும், மேலும் சில கவலைகளையும் நளினி என்னோடு பகிர்ந்துகொண்டார்.
ஒருநாள் நளினிக்கு வேலை தாமதமாக முடிந்தபோது, என்னை அவர் தனியாக சைக்கிளில் ராயப்பேட்டை அனுப்ப விரும்பாமல், வில்லிவாக்கம் பெரியம்மா வீட்டுக்கு என்னையும் அழைத்துச் சென்றார்.
ஒரு பேருந்துப் பயணத்தில் முதன்முதலாக நாங்கள் இருவரும் நீண்ட நேரம் செலவிட்டது அப்போதுதான். நான் அவருக்கும் அம்மாவுக்கும் இடையிலான பிரிவு பற்றிப் பேசினேன். ஒரு கட்டத்தில் உடைந்து அழுதுவிட்டார். அவரது கண்ணீர் என் கைகளை நனைத்தது. அம்மாவுடன் இணையும் விஷயத்தில், நான் நளினியின் மனதில் பாதியைக் கரைத்துவிட்டேன்.
சில நாட்கள் கழித்து, ஒரு குழுவாக நாங்கள் கோல்டன் பீச் சென்றோம். அங்கு சுற்றிப் பார்த்துவிட்டு சென்னைக்கு வர இரவு தாமதமானது. அதனால் வில்லிவாக்கம் செல்லாமல், ராயப்பேட்டையில் அவரது அம்மா வீட்டுக்கு நளினியை அழைத்து வந்துவிட்டேன்.
நளினி, சுமார் ஒரு வருடம் கழித்து அவருடைய அம்மாவையும் தம்பியையும் பார்த்தார். மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது அது. நளினிக்கு என் மீது ஓர் அபிப்ராயம் வரவும், நட்பு பிரியமாக மாறவும் அந்தச் சம்பவமும் காரணமாக இருந்திருக்கலாம்.
எப்போதும் போர் விமானங்களையும் இடப்பெயர்வுகளையும் மட்டுமே கண்ட எனக்கு, நளினி எத்தனை பெரிய வரமாக அமைந்தார் என்பதை நான் மட்டுமே அறிவேன்.
மார்ச் மாதம் சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்டப் பொதுக் கூட்டம் ஒன்று நடந்தது. அதற்கு நானும் நளினியும் போனோம். கூட்டம் முடிந்து திரும்பி வரும்போது காந்தி சிலை அருகே சாலையைக் கடக்க முடியாத அளவுக்கு வாகன நெரிசல்.
என் கையைப் பிடிச்சுக்கோ’ என்று சொல்லி, என் கைகளைப் பற்றிக்கொண்டு சாலையைக் கடந்தார் நளினி. அந்தப் பிடிப்பிலும் வார்த்தையிலும் அவ்வளவு பிரியம். அன்று வீடு வரை இருவரும் நடந்தே வந்தோம். எங்கள் காதலுக்கு இரு தரப்பிலும் அச்சாணி விழுந்த நாள் அது!
இந்தக் காதல் சிக்கலானது!
காதல் உணர்வு எங்களை ஈர்த்து இருந்தாலும், நளினியின் எதிர்கால வாழ்வு குறித்து நான் கவலைப்பட்டேன். அந்தக் கவலைகளை ஏற்றுக்கொண்ட நளினி, அதற்கான காரணங்களை நிராகரித்தார். காதலில் உறுதியாக இருந்தார். ‘உன்னோடு ஒரு நாள் வாழ்ந்தாலும் போதும்’ என்றார். என்னைப் பற்றியும், என் குடும்பம் பற்றியும் கேட்டார்.
பெரிய கனவுகள், ஆசைகள் எதுவும் எங்களிடம் இல்லாவிட்டாலும், வாழ்வின் மீது பெரும் தாகம் இருந்தது. இதை எப்படி அமைப்புக்குச் சொல்வது, நளினியின் அம்மாவும் தம்பியும் இதை எப்படி எதிர்கொள்வார்கள் என்ற எண்ணங்களுக்கு இடையில் சில நாட்கள் ஓடின.
ஒரு பெண்ணாகப் பிற உயிர்கள் மீது கரிசனத்தோடு இருந்தாரே தவிர, நளினிக்கும் ஈழப் போராட்டத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு போராளியைக் காதலித்ததைத் தவிர, வேறு எந்தத் தவறையும் அவர் செய்யவில்லை!
தேவை ஒரு தமிழ்ப் பெண்!
சிவராசன் மாஸ்டரை ஒருநாள் பார்க்கப் போனேன். ‘இந்திய ராணுவத்தோடு அமைப்புக்கு ஏற்பட்ட முரண்பாட்டால், இங்குள்ள அரசியல் தலைவர்கள் பலரை நாம் பகைத்துக்கொள்ளும்படி ஆனது. ஆகவே, நல்லெண்ணத்தை வளர்க்க அவர்கள் வரும்போது மாலை அணிவிக்க தமிழ்ப் பெண் ஒருவர் வேண்டும்’ என்றார்.
எனக்கு தமிழகத்தில் தெரிந்த ஒரே பெண் நளினி மட்டும்தான். எங்கள் அமைப்பைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் சிவராசன் கேட்டார் என்று நளினியை அறிமுகம் செய்துவைத்தேன். எனக்கு அமைப்பால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலையும் மீறி, ஒரு மூத்த உறுப்பினரைச் சந்தித்து நளினியை அறிமுகம் செய்துவைத்தேன். நான் வாழ்க்கையில் செய்த ஒரே தவறு அதுதான்!
தாணு, சுபா இருவரையும் சில இடங்களுக்கு அழைத்துச் சென்றார் நளினி. எனக்காக, என் மீதான காதலுக்காக எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அதைச் செய்தார் நளினி. நான் வழக்கம்போல அமைப்பு சொன்ன உதிரி வேலைகளைச் செய்து வந்தேன்.
ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்படுவதற்கு ஒரு மாதம் முன்பு, ஏப்ரல் 22-ம் தேதி திருப்பதியில் வைத்து நளினியின் கழுத்தில் தாலி கட்டினேன். பல்வேறு நெருக்கடிகள் காரணமாக எங்கள் திருமணத்தை ரகசியமாக வைக்க வேண்டியிருந்தது!
அந்தக் கொலைக்குப் பின்…
மே 21 இரவு, ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும், அதிர்ச்சியும் குழப்பமும் சரிவிகிதத்தில் என்னைத் தாக்கின. இரவுகள், தூக்கத்தைத் தொலைத்தன. பகல்கள், கொடுந்துயர்மிக்கதாக மாறின. விடுதலைப் புலிகள், அவர்களின் ஆதரவாளர்கள் என அனைவரையும் தேடித் தேடி வேட்டையாடியது காவல் துறை.
வெளியே தலைகாட்டவே இல்லை நாங்கள். ஆனால், ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட ஐந்து நாட்கள் கழித்து தணுவின் படம் வெளிவந்தபோது பீதியில் உறைந்துவிட்டோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல் எங்கள் உலகத்தைச் சுருக்கியது. நளினியின் தம்பி பாக்கியநாதனை சி.பி.ஐ. அழைத்துச் சென்ற தகவல் தெரிந்து, நளினி வீட்டுக்கு நான் சென்றபோது அவரது அம்மா என்னைத் திட்டினார்.
என் குடும்பத்தோட வாழ்க்கையையே நாசமாக்கிப் போட்டீங்களே’னு அழுதார். நான் மௌனமாக இருந்தேன். வேறென்ன சொல்ல முடியும்? அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் இருந்தார்கள். நான் அவர்களைச் சமாதானப்படுத்தி, தற்கொலை முடிவை நிறுத்தினேன்.
திருப்பதியில் மனமாற்றம்!
மறுநாள் காலை நானும் நளினியும் மீண்டும் திருப்பதி சென்றோம். என்னிடம் இருந்த சயனைடு குப்பி, தண்ணீரில் நனைந்து பாழாகிவிட்டது. புதிய சயனைடு குப்பி கேட்டிருந்தேன். தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்திருந்தோம். ஆனால், திருப்பதி போன மறுநாளில் இருந்து நளினி வாந்தி எடுக்கத் தொடங்கினார். அவர் கர்ப்பமாக இருந்தார்!
தற்கொலை முடிவைக் கைவிட்டோம். சி.பி.ஐ.-யால் தேடப்படும் என்னால், ‘கர்ப்பவதி’ நளினியைக் கவனித்துக்கொள்ளவே முடியவில்லை. அவருக்கு வாந்தி நிற்கவே இல்லை. உதவிக்கு யாரையும் தொடர்புகொள்ளவும் முடியவில்லை. வேறு வழி இல்லாமல், விழுப்புரத்தில் இருந்த ஒரு நண்பரின் வீட்டுக்குச் சென்றோம்.
ஆனால், அவர் அங்கு இல்லை. அதனால் அங்கிருந்து சென்னைக்குத் திரும்பினோம். சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் நாங்கள் இறங்கியபோது, எங்களைக் கைதுசெய்தது போலீஸ். கைதான சில நாட்களில் எனக்கு, ‘மொட்டைத் தலை’ முருகன் என்று பெயர் வைத்தார்கள். ரொம்ப வேடிக்கையான பெயர்!
37 கிலோ கர்ப்பிணி!
விசாரணைக் கைதியாக செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது, நளினி ஐந்து மாதக் கர்ப்பிணி. அப்போது அவரது எடை, வெறும் 37 கிலோ! நளினியை நான் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு சந்திக்க அனுமதி கிடைத்தது. அவரைப் பார்க்க, பெண்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். தரையில் அமர்ந்திருந்தார்.
என்னைப் பார்த்ததும் ஒரு குழந்தை போல தவழ்ந்து, தவழ்ந்து சுவர் ஓரமாக வந்து ஜன்னலைப் பிடித்தபடி எழுந்து நிற்க முயன்றார். நான் ஓடிச்சென்று தூக்க முயன்றபோது, என்னைத் தடுத்தார்கள். ‘எனக்குச் சாப்பாடு பத்தலை… ரொம்பப் பசிக்குது. இப்படியே விட்டா, என் பிள்ளை செத்துப்போகும்’ என்று சொன்னார் நளினி. என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
நான் என் செல்லுக்குத் திரும்பி வந்தேன். என்னைக் கைதுசெய்தபோது என்னிடம் 10,000 ரூபாய் பணம் இருந்தது. அதை என்னிடம் தரச் சொல்லியும், நளினிக்கு போதிய உணவு கொடுக்கச் சொல்லியும் சாகும் வரை தண்ணீர் அருந்தாமல் உண்ணாவிரதம் அமர்ந்தேன். அந்தப் பணத்தை என்னிடம் கொடுத்தார்கள்.
அதை முறைப்படி நளினியின் கணக்கில் சேர்த்து, அவருக்கு ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்க ஏற்பாடு செய்தேன். பிரசவத்துக்காகக் குறித்த தேதிக்கு பல வாரங்கள் முன்னரே, நளினி பெண் குழந்தையைப் பிரசவித்தார். தாயும் குழந்தையும் மிகவும் பலவீனமாக இருந்தார்கள். மாற்றுத் துணியோ, உணவோ, எதுவுமே எங்களுக்கு இல்லை.
ஒவ்வோர் இரவிலும் நளினி அனுபவித்த அந்தத் துன்பம் என்னால் வந்தது என்று இப்போதும் நினைத்து நினைத்து அழுகிறேன். சிறை அதிகாரி ஒருவர், நளினியின் நிலையைப் பார்த்துவிட்டு குழந்தைக்கு பால்மாவு வாங்கிக் கொடுத்தார். சிறைக்கு வந்த பேரறிவாளனின் அப்பா குயில்தாசன், குழந்தை அரித்ராவுக்கு கொசுவலை வாங்கிக் கொடுத்தார்.
கேட்க இது சாதாரணமாக இருக்கும். ஆனால், அது அப்போது மிகப் பெரிய உதவி. அரித்ராவுக்கு இரண்டரை வயதானபோது நளினியை சேலம் சிறைக்கு மாற்றினார்கள். அங்கே பாலுக்காகப் பசு மாடுகள் வளர்த்தார்கள். அரித்ரா அந்தப் பசுமாடுகளைப் பார்த்து ஆச்சரியமாக, ‘அது என்ன?’ என்று கேட்டாள். நளினி அழுதுவிட்டாள்.
குழந்தையின் எதிர்காலம் குறித்த அபாயம் உணர்ந்தவர், என்னிடம் உடனே குழந்தையை வெளியுலகத்துக்குப் பரிச்சயமாக்க வேண்டும் என்றார். ஆனால், பொருத்தமான கூட்டில்தானே அந்தச் சிட்டுக்குருவி வசிக்க முடியும். காத்திருந்தோம்.
எங்கள் வழக்கிலேயே சக சிறைவாசியாக இருந்த சுசீந்திரனின் தாயார், ஆசை ஆசையாக அரித்ராவை கோவையில் வைத்து வளர்த்தார். சில ஆண்டுகள் கழித்து ஈழத்துக்குச் சென்ற அரித்ரா, பிறகு அங்கிருந்து லண்டன் சென்றாள். இப்போது அவளுக்கு வயது 22.
தனிமையே இணை!
இன்றும் பாதுகாப்பு என்ற பெயரில் தனிமைச் சிறையில்தான் என்னையும் நளினியையும் அடைத்துவைத்திருக்கிறார்கள். ஆறு அடி தூர இடைவெளியில் 10 பேர் சூழ்ந்து நிற்கும் சூழல்தான் நானும் நளினியும் பேசிக்கொள்ளும் ‘தனிமைத் தருணங்கள்’! நீண்ட கால சிறைவாசிகளுக்கு செவித்திறன் பாதிக்கப்படும்.
ஆம்… எனக்கும் நளினிக்கும் செவித்திறன் பிரச்னை உள்ளது. செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ள இருவர், ஆறு அடி இடைவெளியில் என்ன பேசிக்கொள்ள முடியும் என்று நீங்கள் கற்பனை செய்துகொள்ளுங்கள்.
நாளை ஒருவேளை என் தண்டனை குறைக்கப்படலாம்… அல்லது நான் தூக்கில் இடப்படலாம்! என் வாழ்வின் எஞ்சிய நாட்களை, ஒருவேளை எஞ்சினால், நான் எப்படிக் கழிக்க வேண்டும் என்பதை இந்த மதில் சுவர்களே தீர்மானிக்கும். வாழ்வின் எந்த சந்தோஷங்களையும் காணாத எனது வாழ்வில், ஒரு வானவில்லைப் போல மின்னி மறைந்த நளினியுடனான காதல் நினைவுகள் மட்டுமே என்னிடம் எஞ்சியிருக்கின்றன.
நான் என் காதல் மனைவிக்காக கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஓர் ஆயுள் தண்டனைக் கைதிக்கு சிறையில் என்னவெல்லாம் உரிமைகள் வழங்கப்படுமோ, அதை மட்டுமாவது நளினிக்கு வழங்குங்கள். என் காதல் மனைவிக்கு என்னால் செய்ய முடிந்ததெல்லாம், இப்படியான வேண்டுதல்கள்தான். ஆனால், அவள் எனக்காக தன் வாழ்க்கையையே கொடுத்துவிட்டாள்!






புதன், 12 பிப்ரவரி, 2014

திரைப்பட இயக்குனர் பாலுமகேந்திரா

இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. இயற்பெயர், மகேந்திரா. அவரது அண்டை வீட்டுக்காரர் கவிஞர் காசி ஆனந்தன். அழியாத கோலங்கள் திரைப்படத்தில் வரும் மூன்று சிறுவர்களில் ஒருவர் காசி ஆனந்தன் தான் என பாலு மகேந்திரா நேர்ப்பேச்சில் குறிப்பிட்டார். லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1971ல் தங்கப்பதக்கம் பெற்றார்.


அவரது பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு அவரை ‘செம்மீன்’ படப்புகழ் ராமு காரியத் அவரது ‘நெல்லு’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அப்படத்துக்கு 1972ல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது பெற்றார்.
அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். கெ. எஸ். சேதுமாதவனின் ‘சுக்கு’,’ ஜீவிக்கான் மறந்நு போய ஸ்தீரி’ ‘சட்டக்காரி’ பி என் மேனோனின் ‘பணிமுடக்கு’ போன்றவை முக்கியமான படங்கள்.
ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டார். இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர். கடைசியாக இவர் தலைமுறைகள் திரைப்படத்தை இயக்கினார்.
1977ல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான ‘கோகிலா’வை கன்னட மொழியில் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவுசெய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977ல் வெளியாயிற்று. 1978ல் தமிழில் அவரது முதல் படமான ‘அழியாத கோலங்கள்’ வெளியாயிற்று. பாலு மகேந்திரா மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குனர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார் வீடு, சந்தியாராகம், வண்ண வண்ண பூக்கள். சிறந்த திரைக்கதைக்கு கோகிலா, அழியாத கோலங்கள் ஆகியவை விருது பெற்றன. ஜூலி கணபதி சிறந்த படத்தொகுப்புக்கான சாந்தாராம் விருது பெற்றது. இம்மூன்று துறைகளிலும் விருதுபெற்ற ஒரே திரைப்பட நிபுணர் அவரே.
பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பலர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குனர்களாக உள்ளனர். “சேது”, “நந்தா”, “பிதாமகன்” போன்ற படங்களை இயக்கிய பாலா, பாலு மகேந்திராவின் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.
ராம், வெற்றி மாறன், சீமான் சுகா, சீனு ராமசாமி போன்றவர்கள் மற்ற உதவியாளர்களாவர். பாலு மகேந்திரா படிக்கும் காலத்திலேயே பாலி மிஸ்திரி, ஜி.கே.மூர்த்தி, சுப்ரதோ முகர்ஜி ஆகியோரின் ஒளிப்பதிவால் கவரப்பட்டவர். ஆனால் அவர் எவரிடமும் உதவியாளராக வேலை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்க்து.
மூச்சு திணறல் காரணமாக திரைப்பட இயக்குனர் பாலுமகேந்திரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (13.02.2014) காலை அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது(74). திரையுலகத்தை சேர்ந்த பல்வேறு இயக்குனர்களும், தொழில் நுட்ப கலைஞர்களும் மருத்துவமனைக்கு விரைந்த வண்ணம் இருக்கிறார்கள்.

வெள்ளி, 6 டிசம்பர், 2013

நெல்சன் மண்டேலா...

இனி எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும், எத்தனை யுகங்கள் கடந்தாலும் இந்நூற்றாண்டின் 2013ஆவது ஆண்டை காலம் சபித்துக்கொண்டே இருக்கும். காரணம் 21ஆம் நூற்றாண்டின் மாபெரும் தலைவர், விடுதலைத் தீரத்தோடு தன் மக்களை மீட்டெடுத்த மாமனிதர் நெல்சன் மண்டேலா இயற்கை எய்திய ஆண்டு என்பதால்.
 
இன்னும் சில நாட்கள் பொறுத் திருந்தால் சரித்திரம் சபிக்கும் பழிச்சொல்லிலிருந்து 2013ஆம் ஆண்டு தப்பித்திருக்கும் ஆம்... நாம் இப்படி விவரிப்பது சரியானதாகவே இருக்கும் என்று நம்புகிறோம்!
 
நெல்சன் மண்டேலா... இவருக்கு வயது 95. தென்னாபிரிக்காவின் சரித்திர பக்கங்கள் மட்டுமல்ல உலக வரலாற்றுப் பக்கங்களை புரட்டிப் பார்த்துத் தேடினாலும் இவரைப் போல் இன்னொருவரை காண முடியாது.
 
இவர் ஒருவர் தான் இவர் மட்டும்தான் என்று மற்றுமொரு புரட்சித் தலைவரான பிடல் கஸ்ட்ரோ குறிப்பிட்டிருந்தார். அதன்படி நெல்சன் மண்டேலா தரித்து நின்று தரிசிக்க வேண்டிய ஒருவர். இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை ஜனநாயக ஆட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். சாத்வீக போராளியாக, ஆயுதப் போராட்ட தலைவனாக தன்னை அவ்வப்போது மாற்றிக் கொண்டாலும் விடு தலை விடுதலை என்றே அவரின் மூச்சுக்காற்று உச் சரித்துக்கொண்டிருந்தது.
தேசத்துரோகம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக அடையாளம் காட்டி அப்போதைய ஆட்சியாளர்கள் நெல்சன் மண்டேலாவை சிறையில் அடைத்தார்கள். ஒரு நாட்டின் தலைவர் இறந்துவிட்டால் அந்நாட்டு மக்கள் கண்ணீர் வடிப்பர். ஏன் அந்நாட்டின் ஆதரவு நாடுகள் இரங்கல் தெரிவித்து தம் பங்கிற்கு ஒரு மலர் கொத்தை அனுப்பி வைக்கும். ஆனால் நெல்சன் மண்டேலாவின் உயிர் பிரிந்த செய்தியைக் கேட்டு ஒட்டுமொத்த உலகமே அழுகிறதென்றால் அது நெல்சன் மண்டேலாவிற்கு மட்டுமே என்பதை சரித்திரம் உச்சரித்துக்கொண்டே இருக்கும்.
 
தன்நாட்டு மக்களை மட்டுமன்றி உலக மக்கள் அனைவரையும் நேசித்த ஒரே மனிதர். உலக மக்கள் அனைவரும் நேசித்த ஒரே மனிதர் என்றால் அது மண்டேலா மட்டும்தான்.
2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி நெல்சன் மண்டேலா எனும் சிறைப்பறவையின் உயிர் கூடுவிட்டுப் பிரிந்த துயரச் செய்தி உலகெல்லாம் வேகமாகப் பரவியது. செய்தியை மட்டும் பரப்பவில்லை செய்தியோடு சேர்த்து கண்ணீரையும் பரப்பிவிட்டுத்தான் ஓய்ந்தது.
 
தலைவன் என்றால் இப்படி இருக்கவேண்டும். மனிதன் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று கைநீட்டி காட்ட மனித குலத்தில் பிறந்த விடுதலை வீரனை இயற்கை தன்னோடு அழைத்துக்கொண்டதில் உலகத்திற்கே பேரிழப்பு.
 
இழப்பு இழப்பு என்று எதையெதையோ எத்தனை எத்தனை பேர்களையோ நாம் அடையாளம் காட்டுகின்றோம். உண்மையில் பேரிழப்பு என்றால் அது நெல்சன் மண்டேலாதான்.
 
1918ஆம் ஆண்டு ஜுலை மாதம் 18ஆம் திகதி தென்னாபிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் ஒரு மண் குடிசையில் பிறந்தவர்தான் ஒட்டுமொத்த உலகத்தையும் அழவிட்டுச் சென்றுள்ள நெல்சன் மண்டேலா.
 
இவரின் முழுப்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா. இவரது தந்தை சோசா எனப்படும் தென்னாபிரிக்க பழங்குடி மக்களின் தலைவர். ஆடு மாடு மேய்த்துக்கொண்டே பள்ளியில் படித்தார். சிறு வயதில் இவர் ஒரு குத்துச் சண்டை வீரராக அடையாளம் காணப்பட்டார்.
1941ஆம் ஆண்டு ஜொகன்னஸ்பேர்க் சென்று பகுதி நேர படிப்பாக சட்டககல்வி கற்றார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியும், ஒரு எஸ்டேட் தரகராகவும் வேலைப் பார்த்தவர்தான் மண்டேலா.
 
மண்டேலா பற்றி மட்டுமே சொன்னால் போதுமா அவர் எப்படிப்பட்ட ஒரு சூழ் நிலையில் தம் மக்களை விடுவிக்கும் தீரத்தோடு போராடினார் என்பதற்கு அக்கால நிலவரத்தைச் சொன்னால்தானே பொருந்தும்.
 
தென்னாபிரிக்காவின் வரலாற்றைப் பார்த்தால் தொன்று தொட்டே கறுப்பர்கள்தான் தென்னாபிரிக்க மண்ணுக்கு சொந்தக்காரர்கள். கறுப்பர்கள் என்று அடையாளப்படுத்துவதாக எண்ணிக்கொள்ளாதீர்கள். தென்னாபிரிக்காவில் பிரச்சினை வெடிக்க காரணமே இந்த நிறவெறிதான். அதை கறுப்பு, வெள்ளையர்கள் என்று சொன்னால் புரிந்துகொள்ள இலகுவாகும் என்பதனால் அப்படியே சொல்லாடலைப் பயன்படுத்துகின்றோம்.
 
17ஆம் நுற்றாண்டளவில் அங்கு வந்து குடியேறினார்கள் வெள்ளையர்கள். வெள் ளையர்கள் என்றால் பிரஞ்சுக் காரர்களும் டச்சு நாட்டவர்களும் ஆங்கிலேயர்களும். இவர்களை வரவேற்று விருந்தினர்களாக நடத்தத் தொடங்கினார்கள் தென்னாபிரிக்க மண்ணின் மைந்தர்கள். அங்குதான் பிரச்சினையே ஆரம்பமானது.
 
இப்படி விருந்தினர்களாக உள்ளே வந்த வெள்ளையர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க அந்நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள் வெள்ளையர்கள். கைப்பற்றிய அதிகாரத்தை வைத்து அந்நாட்டு மக்களான கறுப்பினத்தவர்களை கொத்தடிமைகளாக நடத்த தொடங்கினர். விருந்தினார்களாக நாட்டிற்குள் வந்த வெள்ளையர்கள் அந்நாட்டில் 80 சதவீதமாக இருந்த கறுப்பர்களுக்கு ஒதுக்கிக்கொடுத்த நிலப்பரப்பின் அளவு எவ்வளவு தெரியுமா, பதின்மூன்றே வீதம்தான்.
 
வெள்ளையர்களுக்கு என்று தனித்தனியாக ஒவ்வொன்றையும் அமைத்துக்கொண்டார்கள். பள்ளிக்கூடங்கள், நூலகங்கள், விளையாட்டு மைதானங்கள், மருத்துவமனைகள், கட்டடங்கள், பூங்காக்கள் என்று அனைத்தையும், ஆனால் இதற்கு ஒரு கறுப்பு இனத்தவர்கூட உள்ளே வரமுடியாது.
 
இவ்வளவு ஏன் வெள்ளையர்கள் வாழும் பகுதிகளில் நடப்பதற்குகூட கறுப்பினத்தவர்களுக்கு அனுமதி கிடையாது. இது எப்பேர் பட்ட துயரம் என்பதை ஊகித்துக்கொள்ளுங்கள்.
 
இப்படி சொந்த மண்ணிலேயே மக்கள் அடிமைகளாக நடத்தப்படுவதையும் சிறுபான்மை வெள்ளையர்களின் ஆதிக்கத்தைத் தகர்க்கவும் உயிர்த்தெழுந்த ஞாயிறுதான் நெல்சன் மண்டேலா. இந்த கறுப்பின அடக்குமுறையை தகர்த்தெறிய வேண்டும் என்பது மண்டேலாவிற்கு சிறுவயதிலிருந்தே வளர்ந்துவந்த ஓர் உணர்வு. அதை நடத்தியும் காட்டிவிட்டார் மண்டேலா.
 
வோர்ட் எயார் பல்கலைக் கழகத்தில் மாணவராக இருந்தபோது ஒருமுறை மாணவர்களின் போராட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காக அவர் அந்தக்கல்வி நிலையத்திலிருந்து வெளியேற்றப் பட்டார். ஆனால் நெல்சன் மண்டேலா கல்வியை கைவிடவில்லை. விட்வோட்டர் ஸ்ரன்ட் என்ற பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டத்துறையில் பட்டம் பெற்றார். பின்னர் தன் நண்பரான வோல்டர் சிசிலுவுடன் இணைந்து தென்னாபிரிக்காவின் கறுப்பின முதல் சட்ட நிறுவனத்தைத் தொடங்கினார்.
 
அந்த காலகட்டத்தில் வெள்ளையின ஆதிக்கத்தை எதிர்த்து போராடி வந்தது ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்.
 
அப்போது கல்லூரி மாணவராக இருந்த நெல்சன் மண்டேலா காங்கிரஸின் இளைஞர் பிரிவைத் தொடங்கினார். மண்டேலாவின் வருகைக்குப்பிறகு இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. 1960ஆம் ஆண்டு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய கறுப்பினத்தவரின் மீது பொலிஸார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 69 பேர் கொல்லப்பட்டனர். இருபதாயிரம் பேர் கைது செய்யப் பட்டனர். கொதித்தெழுந்த மக் கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட் டம் நடத்தவே ஆபிரிக்க தேசிய காங்கிரசை தடை செய்தது அப் போதைய தென்னாபிரிக்க அரசு.
 
அதுவரையில் அகிம்சை வழியில் போராடிக்கொண்டிருந்த நெல்சன் மண்டேலாவும் அவருடைய கூட்டாளிகளும் ஒரு முடிவெடுத்தார்கள். இனி அகிம்சை வழி போராட்டம் பலன் தராது. அதனால் நாம் ஆயுதம் ஏந்தி போராடுவோம் என்பதுதான் அந்த முடிவு.
ஆயுதம் ஏந்திப் போராடுவது என்ற முடிவுக்குப் பின் நெல்சன் மண்டேலா நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார். ஒரு வருடத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்த நெல்சன் மண்டேலா 1962ஆம் ஆண்டு நாடு திரும்பினார். உடனேயே நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார்.
 
அவரைக் கைதுசெய்ததற்காக அவர்கள் கூறிய காரணம். நெல்சன் மண்டேலா உரிய ஆவணங்கள் இன்றி நாட்டை விட்டு வெளியேறினார் என்றும் அரசுக்கு எதிராக புரட்சி செய்தார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டார். குற்றம் விசாரிக்கப்பட்டது, குற்றம்சுமத்தியவர்களே விசாரித்தால் எப்படி நியாயமான தீர்ப்பு கிடைக்கும்? இறுதியாக வந்தது தீர்ப்பு... என்ன தண்டனை? ஆயுள் தண்டனை!
 
நெல்சன் மண்டேலா என்னும் வேகம் மிக்க இளைஞனை 1964ஆம் ஆண்டு தீவுச்சிறையில் அடைத்தது அப்போதைய தென்னாபிரிக்க அரசு. அத்தோடு எல்லாம் முடிந்துவிட்டது இனி எந்தப்பிரச்சினையும் இல்லாமல் வெள்ளையர்கள் இருக்கலாம் என்று எண்ணினார்கள். ஆனால்
 
அதன் பிறகு அவர்களுக்கு அவ்வளவு எளிதானதாக அமைந்துவிடவில்லை.
இப்படி ஆயுள் தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்த நெல்சன் மண்டேலாவிக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கினார்கள். என்னவென்றால் நாங்கள் உங்களை உடனே விடுதலை செய்துவிடுகிறோம் ஆனால் நீங்கள் ஒரு நிபந்தனைக்கு உட்படல் வேண்டும்.
என்ன நிபந்தனை தெரியுமா?
 
இனி எந்தவிதப் போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது. இந்த ஒற்றை நிபந்தனை ஏற்றுக்கொண்டால் உங்களை விடுதலை செய்துவிடுவோம் என்றனர்.
மண்டேலா கூறிய பதில்... முடியவே முடியாது.
 
முதன்முதலில் கேட்கப்பட்ட ஆண்டு 1973இல். அதன்பிறகு 1983ஆம் ஆண்டு அந்நாட்டு ஜனாதிபதி இந்த நிபந்தனையை முன்வைத்து நெல்சன் மண்டேலாவிடம் கேட்டார். அப்போதும் அவர் சொன்னது முடியவே முடியாது என்றுதான்.
 
இந்த மன உறுதி கறுப்பினத்தவர்களை ஒன்றுபட வைத்து ஊக்கமூட்டியது. இதன்பயனாக நாடெங்கிலும் போராட்டம் வெடித்தது. மண்டேலாவை விடுவிக்க கோரி உலக நாடுகளும் தென்னாபிரிக்காவை நெருக்கத் தொடங்கின பணிய மறுக்கவே தென்னாபிரிக்காவின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன உலக நாடுகள். உலகமே போர்க்கொடி தூக்கிய பிறகு தமது அட்டூழியங்களை உணர்ந்தது வெள்ளையின சமூகம். 1990-ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் நாள் அப்போதைய தென் னாபிரிக்க ஜனாதிபதி கிளார்க் நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்தார். இவரின் விடுதலையினால் 1990ஆம் ஆண்டு புனிதமானது.
 
புன்னகையைப் பூத்தபடி வெளியே வந்தார் நெல்சன் மண்டேலா. அவரை உலகம் அதிசயமாக பார்த்தது. தமது வாழ்க்கையின் கால் நூற்றாண்டை நான்கு சுவருக்குள் கழித்த அவரிடம் எந்தவித காழ்ப்புணர்ச்சியோ, வெறுப்புணர்ச்சியோ அறவே இல்லை. அவரது விடுதலைக்குப் பிறகு இன ஒதுக்கல் சட்டங்கள் அனைத்தும் நீக்கப்பட்டன.
 
கறுப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. 1994ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று தென்னா பிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியானார் நெல்சன் மண்டேலா. அவ்வளவு கொடு மைகளுக்குப்பிறகு ஜனாதிபதியான அவர் என்ன சொன்னார் தெரியுமா? தமது மக்களைப் பார்த்து இவ்வாறு கூறினார்......
நம்மை ஒடுக்கியவர்களைப் பார்த்து நாமெல்லாம் தென்னாப் பிரிக்கர்கள். பழைய ரணங்களை மறந்து ஒன்றாக இணைந்து புதிய தென்னாபிரிக்காவை உருவாக்குவோம், எல்லா கட்சிகளின் தலைவர்களுக்கும் நான் நட்புக் கரத்தை நீட்டுகிறேன் இந்த நாட்டை மறுநிர்மாணம் செய்ய உதவுமாறு அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
 
இப்படிப்பட்ட உன்னத தலைவர் வாழ்ந்த காலத்திலேயே நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்றால் நாமெல்லாம் பேறு பெற்றவர்கள். தென்னாபிரிக்காவில் இன ஒதுக்கல் என்ற அரக்கன் ஒழிய பாடுபட்ட அவருக்கும் 1993ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனால் நோபல் பரிசு பெருமைப்பட்டுக்கொண்டது. 1999ஆம் ஆண்டு அவராகவே ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
 
பல்லாண்டுகள் தனது மக்கள் பட்ட கொடுமைகளையும், 27ஆண்டுகள் தாம் அனுபவித்த வேதனைகளையும் நினைத்து அதிகாரம் தன் கையில் வந்தவு டன் நெல்சன் மண்டேலா ெவள்ளையினத்தவரை பழி வாங்க புறப்பட்டிருந்தாலும் அது தப்பில்லை என்று நியாயம் பேசியிருக்கும் காலம். ஏன் நாமும் அதைச் சரியென்றே ஏற்றுக்கொண்டிருப்போம்.
ஆனால் அவர் அப்படி செய்யாததனால் மனிதநேயத்தின் மறுஉருவமாக அவரை பார்த்து அவரின் மரணப் படுக்கையை கண்ணீர்புக்களை இட்டு நிரப்புகிறது உலகம்.
 
மண்டேலா என்னும் மனிதன் இறந்திருக்கலாம். ஆனால் மண்டேலா என்னும் மனிதம் இறக்காது.
 

வீரப்பன் படிப்பறிவற்ற காட்டுவாசிதான்.ஆனால், அவரிடம் மனிதநேயமும் சொன்ன சொல்லைக் காப்பாற்றும் சத்தியமும் இருந்தது.

பழ.நெடுமாறன் :- வீரப்பன் படிப்பறிவற்ற காட்டுவாசிதான்.ஆனால், அவரிடம் மனிதநேயமும் சொன்ன சொல்லைக் காப்பாற்றும் சத்தியமும் இருந்தது. வீரப்பன், ராஜ்குமாரைக் கடத்தி வைத்திருந்தபோது, அவரை மீட்பதற்காக நான் உள்ளிட்ட குழுவினர் காட்டுக்குள் சென்றோம். அப்போது எங்களையும் வீரப்பன் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தால்,யாராலும் எதுவும்செய்துஇருக்க முடியாது. எங்களை அனுப்பிவைத்த அரசாங்கமும் கண்டுகொள்ளாமல்தான் விட்டிருக்கும்.நாங்கள் அரசை நம்பி அல்ல…

வீரப்பன் என்ற தனி மனிதனின் நேர்மையை நம்பித்தான் காட்டுக்குள் சென்றோம். வீரப்பனும் கடைசி வரையில் அந்த நேர்மை யைக் காப்பாற்றினார்.வீரப்பன் வேட்டை என்ற பெயரில் அதிரடிப் படையினர் சத்தியமங்கலம் பகுதி மலைவாழ் மக்கள் மீதுநடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நாம் அறிவோம்.

ராஜ்குமார் கடத்தல் சமயத்தில்‘பாதிக்கப்பட்ட

மலைவாழ் மக்களுக்கு இழப்பீடு தர வேண்டும்’ என்பது வீரப்பன் வைத்த கோரிக்கைகளில் ஒன்று. அதற்காக அவர் ஒரு பட்டியல் கொடுத்தார். அதில் ஊர் வாரியாகப் பாதிக்கப்பட்ட மக்களின் பெயர்கள் குறிக்கப்பட்டு இருந்தன. அந்தப் பட்டியலில் வீரப்பன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயர்கூட இல்லை.ஆனால், அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை அதிரடிப் படை கொன்றிருந்தது. நான் இதைப் பற்றி வீரப்பனிடம் கேட்டபோது, ‘என் குடும்பம் அழிந்தது… அழிந்ததுதான்.

நான் இழப்பீடு வாங்கி என்ன செய்யப்போறேன்? என் பெயரைச் சொல்லி அழிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுத்தால் போதும்’ என்று சொல்லி அதில் உறுதியாகவும் இருந்தார். வீரப்பனிடம் இருந்த இந்தப் பெருந்தன்மை அவரை வேட்டையாடிய அதிகாரிகளுக்கு இல்லை.அந்தச் சமயத்தில் நான் மொத்தம் ஐந்து நாட்கள் காட்டுக்குள் இருந்தேன். அந்த ஐந்து நாட்களும் எனக்காக எல்லோரும் சைவ சாப்பாடுதான் சாப்பிட்டனர்.

எந்த வசதியும் இல்லாத காட்டுக்குள் வீரப்பன் செய்த உணவு உபசரிப்பை என்னால் எப்போதும் மறக்க முடியாது!”

திங்கள், 7 அக்டோபர், 2013

ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன்

*கொழும்பு புதுக்கடையில் ஒக்டோபர் 23, 1939ம் நாள் பிறந்தார் விக்னேஸ்வரன்.
*இவரது தந்தை, கனகசபாபதி விசுவலிங்கம், தாய் ஆதிநாயகி, இருவரும் மானிப்பாயில் பிறந்தவர்கள்.
*இரு சகோதரிகளுடன் பிறந்த விக்னேஸ்வரனின் பேரன், சேர் பொன்.இராமநாதன், சேர்பொன். அருணாசலம் ஆகியோரின் மைத்துனராவார்.
*இவரது தந்தை ஒரு அரச ஊழியராகப் பணியாற்றியதால், பல்வேறு மாவட்டங்களிலும் தனது சிறுபராயத்தைக் கழித்தார் விக்னேஸ்வரன்.
*ஆரம்பக் கல்வியை குருநாகல் கிறிஸ்ட்ச்சேர்ச் கல்லூரியிலும், பின்னர் அனுராதபுரம் திருக்குடும்ப கன்னியர் மடப் பாடசாலையிலும் பயின்றார்.

*11வது வயதில் கொழும்பு றோயல் கல்லூரியில் இணைந்து உயர்கல்வி பெற்றார் விக்னேஸ்வரன்.
*லண்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், அதையடுத்து, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டப்படிப்பை முடித்தார்.
*கொழும்பு சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று சட்டவாளரானார்.
*1962இல் சட்டக்கல்லூரி மாணவர் ஒன்றியத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
*1979 மே 07ம் நாள் நீதித்துறையில் இணைந்த இவர், ஆரம்பத்தில் மட்டக்களப்பு, சாவகச்சேரி, மல்லாகம் ஆகிய நீதிமன்றங்களில் நீதிவானாகவும், மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றினார்.
*1987ல் ஜனவரியில் கொழும்பு மாவட்ட நீதிபதியாக நியமனம் பெற்ற விக்னேஸ்வரன், 1988ம் ஆண்டில் மேல்நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார்.
*வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மற்றும் மேல் மாகாண மேல்நீதிமன்றங்களில் இவர் மேல்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார்.
*1995ம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசராக நியமிக்கப்பட்ட விக்னேஸ்வரன், 2001 மார்ச் மாதம் உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார்.
*உயர்நீதிமன்ற நீதியரசராக தமிழ்மொழியில் பதவிப்பிரமாண உறுதிமொழி எடுத்துக் கொண்ட விக்னேஸ்வரன், அந்த விழாவில் தமிழர்கள் சிறிலங்காவில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து ஆற்றிய உரை முக்கியமானதாகும்.
*2004ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம், ஓய்வுபெற்ற விக்னேஸ்வரன், 2013 செப்ரெம்பர், 21ம் நாள் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
*யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்ட இவருக்கு, 132,255 விருப்பு கிடைத்தன. இது சிறிலங்காவில் நாடாளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களில் தமிழர் ஒருவர்பெற்ற அதிகளவு விருப்பு வாக்குகளாகும்.

வியாழன், 24 ஜனவரி, 2013

ஆழிக்குமரன் ஆனந்தன் (வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) ஒரு நீச்சல் வீரர்.


ஆழிக்குமரன் ஆனந்தன் (வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) ஒரு நீச்சல் வீரர். பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வீரர் ஆவார். ஏழு உலகசாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர்[மேற்கோள் தேவை].பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் நவரத்தினசாமியின் ஆசியுடன் பாக்குநீரிணையை ஒரேதடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன். 1975இல் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் அவருக்கு ஆழிக்குமரன் என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.சிறுபிள்ளையிலேயே இவர் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டாலும், நீரில் மிதத்தல், மெதுநடை, தொடர்ந்து நடனம் என்று பல செயல்களில் சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார்[மேற்கோள் தேவை]. ஒர் ஈருந்து (மோட்டார் சைக்கிள்) தீநேர்ச்சியின் (விபத்தின்) விளைவால் இவரது மண்ணீரல் அகற்ற நேரிட்டது. ஆயினும் அவர் மனம் தளரவில்லை.இதன் பின்னர் இவர் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்கத் திட்டமிட்டு இங்கிலாந்து சென்றார். குறுகிய பயிற்சியில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்க முற்பட்டார். ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்தபோது குளிரால் பாதிக்கப்பட்டு சாதனை முயற்சியின் போதே மரணத்தையும் தழுவினார். குளிர்ந்த கடலே கவலை தருகிறது. அதற்கேற்ப என்னை தயார் செய்ய கால அவகாசம் போதவில்லை என்று தெரிவித்தார். இதுதான் அவர் இறக்கு முன்னர் கூறிய கடைசி வார்த்தைஇறப்பு ஆகஸ்து 6, 1984ஆங்கிலக் கால்வாய். எத்தனை பேர் அறிவோம் இவரை எம் மண்ணின் சாதனை தமிழன் ஒரு முறை நினைத்து பார்போம்
 — 

திங்கள், 24 டிசம்பர், 2012

Today Maths Day - கணிதமேதை சீனிவாச இராமானுஜன்


இன்றைய  இளைய தலைமுறையினர் கணித மேதை பற்றி தெரிந்துகொள்வதற்காக இப் பதிவினை பெரியதாகவே தருகிறேன்.

சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22, 1887 - ஏப்ரல் 26, 1920) உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை. இவர் தமிழ் நாட்டிலுள்ள ஈரோட்டில் பிறந்தார். இவருடைய தந்தையார் கும்பகோணம் சீனிவாசய்யங்கார், தாயார் ஈரோடு கோமளத்தம்மாள். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் 1914 முதல் 1918 முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.


இராமானுஜனின் தந்தையாரும் தந்தைவழிப் பாட்டனாரும் துணிக் கடைகளில் எழுத்தராகப் பணியாற்றி வந்தனர். தாய்வழிப் பாட்டனாரும் ஈரோட்டு முனிசீப்பு அறமன்றத்தில் அமீனாக வேலை பார்த்தவர். ஆகவே இவர் எளிய குடும்பத்தில், ஏழ்மையான நிலையில் இருந்தார். எனினும் இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 

எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தபபட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

பழமையில் ஊறியிருந்த தென்னிந்திய பிராம்மண குடும்பத்தில் அவர் பிறந்தார். பத்து வயதிற்குள்ளேயே இச்சிறுவனுடைய கணித வல்லமையும் நினைவாற்றலும் ஆசிரியர்களுக்கு ஒரு புதிராக இருந்தது. ஆரம்பப் பள்ளியின் கடைசித் தேர்வில் மாவட்டத்திலேயே முதலாவதாகத் தேறியதால் அவனுக்கு கும்பகோணம் டவுன் மேல்நிலைப் பள்ளியில் அரைச்சம்பளக் கல்விச் சலுகை கிடைத்தது. 

12வது வயதில் லோனி எழுதிய முக்கோணவியல் (Trigonometry) என்ற பாட புத்தகத்தை கல்லூரியில் இளங்கலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தன் அண்டை வீட்டு மாணவனிடமிருந்து கடன் வாங்கி படிக்கத் தொடங்கினான். தன்னைவிட 7, 8 வயது சிறியவனான இப்பள்ளி மாணவன் இக்கல்லூரிப் பாடபுத்தகத்தை ஒரே வாசிப்பில் முடித்ததோடு மட்டுமல்லாமல் அதிலிருந்த எல்லா கணக்குகளையும் தானே போட்டு முடித்து விட்டான் என்றதும் அந்தக் கல்லூரி மாணவனுக்கு ஒரே வியப்பு. 

முக்கோணவியல் என்ற பெயர் இருந்தாலும் அப்புத்தகத்தில் சில உயர் கணித விஷயங்கள், உதாரணமாக, பகுவியலில் (Analysis) கூறப்படும் தொடர் வினை (Continuous processes) களைப் பற்றிய விஷயங்கள், அடுக்குக்குறிச் சார்பு (exponential function), கலப்பு மாறியின் மடக்கை (logarithm of a complex variable), மிகைபரவளைவுச் சார்புகள் (hyperbolic functions) முடிவிலாத் தொடர்கள் மற்றும் பெருக்கீடுகள் (infinite series and products) இதைப்போன்ற கணிதத்தின் உயர்தரப் பொருள்களெல்லாம் பாடத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டிருந்தன. இவைகளைப் பற்றி அப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்தது துல்லியக் குறைவாகத்தான் இருந்ததென்றாலும் அப்புத்தகம் தான் சிறுவன் இராமானுஜனுக்கும் இவ்வுயர் கணிதப் பொருள்களுக்கும் ஏற்பட்ட முதல் நட்பு. இதைவிட ஒரு தரமான புத்தகம் அவன் கையில் கிடைக்காதது விதியின் விளையாட்டு போலும். விட்டேகருடைய ‘தற்காலப்பகுவியல்’ (Modern Analysis) உலகத்தில் அப்பொழுதுதான் வந்துவிட்டிருந்தது ஆனால் கும்பகோணம் வரையில் வரவில்லை

பிராம்விச்சுடைய முடிவிலாத்தொடர்கள் (Infinite Series), கார்ஸ்லா வுடைய ஃபோரியர் தொடரும் தொகையீடுகளும் (Fourier Series and Integrals), பியர்பாயிண்டுடைய மெய்மாறிச் சார்புகளின் கோட்பாடு (Theory of functions of a real variable), ஜிப்ஸனுடைய நுண்கணிதம் (Calculus) ஆகியவைகள் அப்பொழுதுதான் எழுதப்பட்டுக் கொண்டிருந்த காலம். இவையெல்லாம் இராமானுஜனுக்குக் கிடைத்திருந்தால் கணித உலகின் வரலாறே மாறியிருக்குமா இருக்காதா என்பதில் இன்றும் கணித இயலர்களுக் கிடையில் மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.

1903 டிசம்பரில் சென்னைப் பல்கலையின் மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் வகுப்பில் தேறினான். அதன் காரணமாக கும்பகோணம் அரசுக் கல்லூரியில் F.A. (இந்தக்காலத்து 11, 12 வது) வகுப்பிற்கு ‘சுப்பிரமணியம் உபகாரச்சம்பளம்’ பெற்றான். அவன் கற்க வேண்டியிருந்த பாடங்கள் ஆங்கிலம், கணிதம், உடற்செயலியல், ரோமானிய கிரேக்க வரலாறு, மற்றும் வடமொழி. ஆனால் கணிதம் தான் அவனுடைய காலத்தையும் சக்தியையும் விழுங்கிக்கொண்டது.கணிதம் தவிர மீத மெல்லாவற்றிலும் தேர்வில் தோல்வியே கண்டான். உபகாரச் சம்பளத்தை இழந்தான். 

கும்பகோணத்தை விட்டு எங்கோ ஆந்திர மண்ணில் தன்னை இழந்து சுற்றித் திரிந்தான். ஓராண்டு காலம் கழித்துத் திரும்பி கும்பகோணம் அரசுக் கல்லூரிக்கே வந்து சேர்ந்தான். ஆனால் 1905 டிசம்பர் தேர்வுக்கு வேண்டியிருந்த உள்ளமைச் சான்று (attendance certificate) கிடைக்காததால் தேர்வு எழுத முடியவில்லை. கும்பகோணம் கல்லூரியும் அத்துடன் அவனை இழந்தது.

ஆனால் அவனுடைய ‘நோட்புக்குகள்’ அவனை இழக்கவில்லை. சென்னை பல்கலைக் கழகத்தின் முதல் நூலகத் தலைவராக இருந்த பேராசிரியர் எஸ். ஆர். ரங்கனாதன் எழுதுகிறார் (அவரே ஒரு கணித வல்லுனரும் கூட): “உள்ளிருந்து அவனை ஒரு ஜோதி ஊக்குவித்த வண்ணம் இருந்தது. கணித ஆய்வுகள் அவனுக்கு தெவிட்டாததாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருந்தது. F.A.தேர்வு கூட தேறமுடிய வில்லையே என்ற ஏக்கம் அவனுடைய கணித ஊக்கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. வேலையில்லாமல் வளய வருவதும் அவனுடைய ஆய்வுகளின் தரத்தையோ அளவுகளையோ குறைக்கவில்லை. சூழ்நிலை, பொருளாதாரம், சமூக கௌரவம் ஒன்றும் அவனுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. 

 அவன் மனதிலும் கையிலும் இருந்ததெல்லாம் விந்தைச்சதுரங்கள் (Magic Squares) , தொடர் பின்னம் (Continued Fractions), பகா எண்களும் கலப்பு எண்களும் (Prime and Composite Numbers), எண் பிரிவினைகள் (Number Partitions), நீள்வட்டத் தொகையீடுகள் (Elliptic Integrals), மிகைப்பெருக்கத் தொடர் (hypergeometric series), இவையும், மற்றும் இவையொத்த மற்ற உயர்தர கணிதப்பொருள்கள் தாம். இவைகளைப் பற்றிய அவனுடைய கண்டுபிடிப்புகளை யெல்லாம் தன்னுடைய மூன்று நோட்புக்குகளில் எழுதினான். நிறுவல்கள் அநேகமாக எழுதப்படவில்லை. 

தற்காலத்தில் இந்த நோட்புக்குகளின் நகல்கள் (212, 352, 33 பக்கங்கள் கொண்டவை) டாடா அடிப்படை ஆய்வுக் கழகம், சென்னைப்பல்கலைக் கழகம், ஸர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை ஆகிய மூன்று அமைப்புகளின் ஒத்துழைப்பினால் பிரசுரிக்கப் பட்டிருக்கின்றன. 1985இலிருந்து 2005 வரையில், ப்ரூஸ் பர்ண்ட் என்பவருடைய விரிவான குறிப்புகளுடன் ஐந்து புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. அவைகளில் 3542 தேற்றங்கள் இருக்கின்றனவென்றும், ஏறக்குறைய 2000க்கும் மேற்பட்ட தேற்றங்கள் அவர் வாழ்ந்த காலத்திற்கு முன்னால் கணித உலகிற்குத் தெரியாத தேற்றங்கள் தான் என்றும் சொல்கிறார் ப்ரூஸ் பர்ண்ட்.

1913 ஜனவரியில் பேரா. சேஷு அய்யரும் அவருடன் இன்னும் சிலரும் சேர்ந்து இராமானுஜனை கேம்பிரிட்ஜ் இல் பேராசிரியராக இருந்த ஜி. ஹெச். ஹார்டிக்கு கடிதம் எழுதவைத்தனர். இராமானுஜனும் கடிதத்தை எழுதி அதற்கு ஒரு சேர்ப்பாக அவருடைய சொந்தக் கண்டுபிடிப்பாக 120 தேற்றங்களையும் (நிறுவல் எதுவும் இல்லாமல்) அனுப்பித்தார். இக்கடிதம் கிடைத்தவுடன் பேரா. ஹார்டியின் முதல் எண்ணம் அக்கடிதம் குப்பையில் போடப்படவேண்டியது என்பதுதான். 

ஆனால் அன்று மாலை அவரும் இன்னொரு பேரா. லிட்டில்வுட்டும் சேர்ந்து அதை மறுபடியும் படித்துப் பார்த்த பொழுது, அது அவர்கள் இருவரையும் தீவிர ஆலோசனையில் ஆழ்த்தியது. அதில் பல தேற்றங்கள் அவர்களுக்கு புதிதாகவே இருந்தன. ஓரிரண்டு தவறான தேற்றங்களும் இருந்தன. புதிதாக இருந்தவைக்கு நிறுவல்கள் கொடுக்கப் படாமலிருந்ததால் அவர்களே அவைகளை நிறுவப் பார்த்தார்கள். 

சிலவற்றை அவர்களால் நிறுவ முடிந்தது. சிலவற்றிற்கு நிறுவலுக்காக என்ன செய்யவேண்டும் என்பதை அவர்களால் ஊகிக்க முடிந்தது. ஆனால் பல தேற்றங்களை அவர்கள் அணுகவும் முடியவில்லை, அவைகளை ஏதோ பிதற்றல் என்று ஒதுக்கவும் முடியவில்லை. உலகத்திலேயே எண் கோட்பாட்டில் பிரமாணமாக எடுத்துக் கொள்ளப் பட்டவர்களான அவர்களாலேயே அத்தேற்றங்களின் உண்மையைப் பற்றி ஒன்றுமே சொல்ல முடியாத நிலையில், இரு வல்லுனர்களும் அன்றே தீர்மானித்து விட்டனர் 

‘இந்த இராமானுஜனை கேம்பிரிட்ஜுக்கு கொண்டுவந்துவிட வேண்டும்’ என்று. அத்தீர்மானம் கணிதத்தில் வரலாறு படைத்த தீர்மானம்.
ஆனாலும் இராமானுஜனால் உடனே நாடு விட்டு நாடு வர முடியவில்லை. பழமையான பண்புகளில் ஊறியிருந்த அவரது சுற்றுச் சூழலின் பாதிப்பை மீறி நாட்டை விட்டுப் புறப்பட்டது மார்ச் 1914இல்தான்.

கேம்பிரிட்ஜில் ஹார்டியுடன் கூட இருந்த நான்கு ஆண்டுகளும் (1914-1918) இராமானுஜனுக்கு மட்டுமல்ல பேராசிரியர் ஹார்டிக்குமே பொன்னான ஆண்டுகள் தாம். இதை ஹார்டியே சொல்கிறார். பிற்காலத்தில், இராமானுஜன் யாருமே எதிர்பார்க்காத 32 வயதிலேயே மரணமடைந்த பிறகு ஹார்டி அவரைப் பற்றி சொல்லும்போது ‘இங்கு வருவதற்கு முன்னால் அவர் என்ன புத்தகம் படித்திருந்தார், இன்னின்ன புத்தகங்களைப் பார்த்திருந்தாரா இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. 

நான் கேட்டிருந்தால் ஒருவேளை சொல்லி யிருப்பாரோ என்னமோ. ஆனால் ஒவ்வொருநாள் நான் அவருக்கு காலை வணக்கம் சொல்லும்போதும் அவர் எனக்கு ஐந்தாறு புதுத் தேற்றங்களை காட்ட ஆயத்தமாயிருந்ததால் எனக்கு வேறு எதையுமே பேச வாய்ப்புமில்லை. அதைப் படித்திருக்கிறாயா, இதைப் படித்திருக்கிறாயா என்று கேட்பதும் பொருத்த மில்லாமலிருந்தது’. 

இராமானுஜனுடைய படைப்பாற்றல் அவ்வளவு வேகமாக இருந்தது. இருந்தாலும்பேரா. ஹார்டி இராமானுஜனுக்கு சில தேவையான் விஷயங்களை சொல்லிக் கொடுக்கத்தான் செய்தார். காரணம், இராமானுஜன் அவையில்லாமல் மாற்று வழிகளுக்காக நேரத்தை செலவழித்து விடுவாரோ என்ற பயம்தான். ஆனால் ஹார்டியே பின்னால் சொல்கிறார் ‘நான் அவருக்குத் தெரியவேண்டியவை என்று சொல்லிக் கொடுத்தது சரிதானா என்று தெரியவில்லை. ஏனென்றால் நான் சொல்லிக்கொடுத்ததால் அவருடைய மேதை பரிமளிப்பதை தடை செய்திருக்கவும் கூடுமல்லவா?’. இன்னமும் சொல்கிறார்: ‘நான் அவருக்கு சொல்லிக்கொடுத்ததுதான் சரி என்று வைத்துக்கொண்டாலும், ஒன்று மாத்திரம் உண்மை. அவர் என்னிடமிருந்து கற்றதை விட நான் அவரிடமிருந்து கற்றது தான் அதிகம்’.


இந்நான்கு ஆண்டுகளில் இராமானுஜன் 27 ஆய்வுக்கட்டுரைகள் பிரசுரித்தார். அவைகளில் 7 கட்டுரைகள் ஹார்டியுடன் கூட்டாக எழுதியவை. 1918 இல் F.R.S. (Fellow of the royal Society) என்ற கௌரவம் அவருக்குக்கொடுக்கப்பட்டது. அதே ஆண்டு ட்ரினிடி கல்லூரியின் ஃபெல்லோவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தஇரண்டு கௌரவங்களையுமே பெற்ற முதல் இந்தியர் அவர்தான்.


சென்னைப் பல்கலைக்கழகமும் அதன் சார்பில் ராமானுஜனுக்காக ஒரு நிலையான ஏற்பாட்டைச்செய்தது. அவர் அதுவரை பெற்றுக்கொண்டிருந்தவெளிநாட்டு உபகாரச்சம்பளம் முடியும் நாளான ஏப்ரல் 1, 1919 இலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு அவருக்கு ஆண்டுக்கு £250 நிபந்தனையற்ற சலுகை தருவதாக ஏற்பாடு செய்தது. புதிதாக கல்வி இயக்குனராகப் பதவியேற்றிருந்த பேரா. லிட்டில்ஹெய்ல்ஸ் அப்பொழுதுதான் மும்பையில் நடந்திருந்த இந்திய கணிதக்கழகத்தின் ஆண்டு மகாநாட்டிலிருந்து திரும்பி வந்திருந்தார்அம்மகாநாட்டில் இராமானுஜனுடைய சாதனைகளைப் போற்றித் தீர்மானங்கள் நிறைவேறியிருந்தன. 

பேரா. லிட்டில்ஹெய்ல்ஸும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியர் பதவி ஒன்று உண்டாக்குவதற்காகவும் அந்தப் பதவிக்கு இராமானுஜனுக்கு அழைப்பு விடுப்பதற்கும் பல்கலைக் கழகத்தை கேட்டுக்கொள்ளப் போவதாகவும் அறிவித்தார். ஆனால் காலச்சக்கரம் வேறு விதமாகச் சுழன்றது.

துரதிருஷ்டவசமாக இராமானுஜன் இங்கிலாந்தில் ஐந்தாவது ஆண்டை மருத்துவ விடுதிகளில் கழிக்கவேண்டி ஏற்பட்டது. ஏப்ரல் 1919 இல் இந்தியா திரும்பினார். தீராத வியாதியும் கூடவே வந்தது. ஆனால் அவருடைய மனதில் ஓடிக்கொண்டிருந்த கணிதப் பிரச்சினைகளின் ஓட்டம் நிற்கவே இல்லை. 

இப்படித்தான் உண்டாயிற்று “இராமானுஜத்தின் தொலைந்துபோன நோட்புக்”. அது 1976இல் கண்டுபிடிக்கப்பட்டு 1987 இல் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புதையலில் 600 அற்புதமான தேற்றங்கள் இருக்கின்றன. ஆனால் அநேகமாக வெகு உயர்மட்டத்திலிருந்த “Mock Theta functions” என்பவைகளைப் பற்றியது இராமானுஜன் 1919-20 இல் செய்த ஆராய்ச்சிகள்.
ஆக, இராமானுஜன் கணித உலகிற்காக விட்டுப்போனது:


• மூன்று நோட்புக்குகள்

• சென்னைப் பல்கலைக் கழகத்திற்காக கொடுக்கப்பட்ட மூன்று காலாண்டு அறிக்கைப் பத்திரங்கள் (1913-1914)

• 138 பக்கங்கள் கொண்ட தொலைந்து போன நோட்புக்

• கணித இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட 32 ஆய்வுக்கட்டுரைகள்

இராமானுஜனின் உள்ளுணர்விலிருந்து உதயமான இக்கணிதச் சொத்து உலகின் நான்கு மூலைகளிலுள்ள கணித வல்லுனர்களையும் ஆயிரக்கணக்கான மாணவர்களையும் ஈர்த்து இருபதாவது நூற்றாண்டின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று என்று பெயர் எடுத்துவிட்டது.

பால் ஏர்டோசு என்ற புகழ்பெற்ற கணித மேதை-வல்லுனர் பேரா. ஹார்டி சொன்னதாகச் சொல்கிறார்: ‘நாம் எல்லா கணித இயலர்களையும் அவர்களுடைய மேதைக்குத் தகுந்தாற்போல் வரிசைப்படுத்தி சூன்யத்திலிருந்து 100 வரை மதிப்பெண் கொடுத்தால் எனக்கு 25ம், லிட்டில்வுட்டுக்கு 30ம், ஹில்பர்ட்டுக்கு 80ம் இராமானுஜனுக்கு 100ம் கொடுக்க வேண்டி வரும்’.


இராமானுஜனுடைய கணிதமேதையை எடுத்துக்காட்டுவதற்காக ஒரு சின்னஞ்சிறு துளியை கீழே காண்போம்.

முனைவர் பி.சி. மஹலனொபிஸ் என்பவர் நேரு காலத்தில் இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டியவர். அவர் இராமானுஜன் கேம்பிரிட்ஜில் வசித்த காலத்தில் அவரும் அங்கு படித்துக் கொண்டிருந்தார். இராமானுஜனுடைய நண்பர். இருவரும் அடிக்கடி சந்திப்பதுண்டு. ஒருநாள் இராமானுஜன் அவரை தன் விடுதிக்கு மதிய உணவருந்த கூப்பிட்டிருந்தார். இராமானுஜன் சமையல் அடுப்பருகில் வேலையில் ஈடுபட்டிருந்ததால், வந்தவர் இருக்கையில் அமர்ந்துஸ்டிராண்ட் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தார். 

அதனில் ஒரு கணிதப் புதிர் இருந்தது. அப்பொழுது முதலாவது உலகப்போர் நடந்துகொண்டிருந்த சமயம். “பாரிஸ் நகரில் ஒரே தெருவில் இரண்டு வீடுகளில் இரண்டு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர்; வீட்டு கதவிலக்கங்கள் தெரியவில்லை, ஆனால் இரண்டு இலக்கங்களினூடே ஒரு கணிதத் தொடர்பு இருக்கிறது, கதவிலக்கங்கள் என்னவாக இருக்கும்?” இதுதான் புதிர். சிறிது நேரம் யோசித்ததில் மஹலனோபிஸ்சுக்கு விடை புரிந்துவிட்டது. அவர் பரபரப்புடன் அதை இராமானுஜனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பப் பட்டார். 

இராமானுஜன் சாம்பாரை கலக்கிவிட்டுக் கொண்டே, ‘சொல்லுங்கள் கேட்போம்’ என்றார். மஹலனோபிஸ் பிர்ச்சினையை எடுத்துரைத்தார். அவர் தன் விடையைச் சொல்லுமுன்பே இராமானுஜன், ‘சரி, இந்த தொடர் பின்னத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்’ என்று ஒரு தொடர் பின்னத்தைக் கூறி அதுதான் விடை என்றார்.

இது நமக்குப் புரிவதற்கு ஸ்டிராண்ட் பத்திரிகையில் இருந்த புதிரின் விபரம் தான் என்ன என்று தெரியவேண்டும். ஆனால் அவ்விபரம் கிடைக்கவில்லை. இருந்தாலும் இராமானுஜனின் மின்னல்வேக விடையைப் புரிந்து கொள்வதற்கு நாமாகவே அப்பத்திரிகைப் புதிர் என்ன மாதிரியில் இருந்திருக்கும் என்று ஊகிக்கலாம். இரண்டு கதவிலக்கங்களைக் கண்டுபிடிப்பது தான் பிரச்சினை. கதவிலக்கங்களை x, y என்று அழைப்போம். 

அவைகளுக்குள் இருந்த தொடர்பையும் நாம் இப்படி வைத்துக் கொள்ளலாம்:
x2 − 10y2 = + 1or − 1
மஹலனோபிஸ் இதைப் பார்த்ததும் ஓரிரண்டு எண்களைப் பொருத்திப் பார்த்தார். x = 3, y = 1 என்ற விடை கிடைத்தது, கிடைத்தவுடன் இராமானுஜனுக்கு சொல்லத் தொடங்கிவிட்டார். ஆனால் இராமானுஜன் பிர்ச்சினையைக் கேட்டவுடனேயே, சாம்பாரைக் கலக்கிக்கொண்டே, இதன் விடை ஒரு தொடர் பின்னத்தில் இருக்கிறது என்று கீழ்வரும் தொடர் பின்னத்தை சொன்னார்:
3 + \cfrac{1}{6+\cfrac{1}{6+\cfrac{1}{6+\cfrac{1}{6+\dotsb}}}}

இதன் பொருளை இராமானுஜனே விளக்கினார்.

இத்தொடர்பின்னத்தின் ஒவ்வொரு ஒருங்கும் ஒவ்வொருவிடையாகும். முதலாவது ஒருங்கு 3/1. x = 3, y = 1 என்பது முதல் விடை. இராமானுஜனுடைய் தொடர்பின்னவிடை அந்தத்தெருவில் முடிவிலாத எண்ணிக்கையில் வீடுகள் இருப்பதாக வைத்துக்கொண்டு, மஹலனொபிஸின் ஒரே விடைக்கு பதிலாக முடிவுறா எண்ணிக்கையில், தொடர்ந்து பல சரியான விடைகள் கொடுக்கின்றன. ஆக, மேற்படி தொடர்பின்னத்தின் 2வது ஒருங்கு
3 + 1/6 = 19/6.
x =19, y = 6 இரண்டாவது விடை.
192 − 10 * 62 = 361 − 360 = 1
மூன்றாவது ஒருங்கு:
3 + \cfrac{1}{6+\cfrac{1}{6}}

இது கொடுக்கும் விடை: x = 117, y = 37

இதுவும் ஒரு சரியான விடைதான்.

நான்காவது ஒருங்கு 721/228. x = 721 y = 228.

இப்படியே போகிறது இராமானுஜனின் தொடர்பின்ன விடை. இராமானுஜனுடைய மேதை அவர் பிரச்சினையைக் கேட்டவுடனேயே இதற்கு விடை முடிவுறா தொடர்பின்னம் தான் என்று கண்டு கொண்டு அத்தொடர் பின்னத்தையும் உடனே கொடுத்தது.

சிறப்புக்கள்

  • 1918 ஆம் ஆண்டில் லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினர் ஆனார்.
  • கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியின் ஃபெல்லோசிப் இவருக்குக் கிடைத்தது.
  • ராமானுஜன் ஆய்வுகளில் "தியரி ஆஃப் ஈகுவேசன்ஸ்", "தியரி ஆஃப் நம்பர்ஸ்", "டெஃபினிட் இன்ட்டக்ரல்ஸ்", "தியரி ஆஃப் பார்டிஷன்ஸ்", "எலிப்டிக் ஃபங்ஷன்ஸ் அண்ட் கண்டினியூடு ஃப்ராக்சன்ஸ்" எனும் நிலைப்பாடுகள் மிகச் சிறந்தவைகளாகக் கருதப்படுகின்றன.
  • இவருடைய "மாக் தீட்டா ஃபங்சன்ஸ்" எனும் ஆராய்ச்சி முடிவுகள் சிறப்பான ஒன்றாகும்.
  • கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் இவரது மரணத்துக்குப் பின் இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

இராமானுசன் கணிதத்துளிகள்

16 வயதுக்குள் கணித இயலர் என்ற தகுதியை தனக்குள் அடைந்து 32 வயதே வாழ்ந்த சீனிவாச இராமானுஜன், உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை இராமானுஜனுடைய கணித மேதையை எடுத்துக்காட்டக்கூடியதாகவும் கணிதத்தில் திறன் இல்லாதவர்களும் ஓரளவு புரிந்து கொள்ளக்கூடிய சில கணிதத்துளிகளை இக்கட்டுரை பட்டியலிடுகிறது. விபரங்களை உரிய இடங்களில் பார்க்கலாம்.
  • மஹலனோபிஸ்ஸை வியக்க வைத்த தொடரும் பின்னமும் அதை ஒட்டிய வரலாறும்.
  • எண் பிரிவினைக்கு ஒரு வாய்பாடு.
  • இரண்டாவது நோட்புக்கில் அடிக்கப்பட்ட ஒரு குறிப்பிலும் உயர்ந்த கணிதம். 
  • ரீமான் சரத்தை யூகித்தறிதல். 
  • தொலைந்த நோட்புக்கிலிருந்து ஒரு விந்தைச்சமன்பாடு. 
  • எண் பிரிவினைச் சார்பைப் பற்றி ஒரு யூகம்.
  • τ-சார்பு. 
  • டௌ-சார்பைப்பற்றிய புகழ்பெற்ற யூகம்.