வியாழன், 30 டிசம்பர், 2010

M.G.R

நீ! ஒரு நாயகன்...

மக்கள் மத்தியில் தலைவராக இருப்பவர்கள் பலர், ஆனால் அவர் அந்த தலமைக்கு தகுதியானவரா, பொருத்தம் கொண்டவாரா என்று அவர்கள் நினைத்து பார்ப்பதில்லை.

அதிலும் சினிமா துறையில் புகழ்பெற்றவர்களை தலைவர் என்று சொல்வதும், கடவுள் என்றே நினைப்பதும் வாடிக்கையான வேடிக்கை... இவரை விட்டால் வேறுரொவரை உலகில் பார்க்க முடியாது என்பதுபொல நினைப்பவர்களை பார்க்கும்பொது சிரிப்பு சிரிப்பாதான் வரும்..

இப்படிப்பட்ட தலைவர்கள் தன்னை அதற்கு, அந்த பொறுப்பிற்கு தகுதியாக்கிக் கொள்கின்றார்களா? என்றால் இல்லையென்றே சொல்லலாம். இப்படிப்பட்டவர்கள் மத்தியில் முற்றிலும் மாறுபட்டவராக, மக்களின் தொண்டனாக, புரட்சி தலைவனாக, ஏழைகளின் தோழனாக தொன்றியவர்தான் புரட்சி தலைவர் டாக்டர் எம். ஜி. இராமச்சந்திரன்.

இவர்மேல் பைத்தியமாக அன்புகொண்டவர்கள் ஏராளம் ஏராளம்.. இவர் புகைப்படத்தை திருமணம் செய்துக் கொண்டவர்கள் கூட உண்டு . இவருக்காக உயிர் விடுவார்கள் என்றும் கேள்விப்பட்டுள்ளேன்... இவற்றை பார்த்த எனக்கு இவர்மேல் வெறுப்பும், கொபமும் வருவதுண்டு.. காலபொக்கில் இந்த தலைவன் இவர்களுக்காக என்ன செய்கின்றான் என்று காணும்பொழுது நானும் ரசிகனானேன் என்பதில் ஆச்சரியமில்லை.... இதை சொல்வதற்கு வெட்கபடவில்லை.

இயக்குனர் மணிரெத்தினம் இயக்கத்தில் வந்த நாயகன் படத்தை பார்க்கும்போது, எனக்குள் தோன்றிய எண்ணம் MGR ன் பாதைதான் நினைவுக்கு வந்தது. நாழுபேருக்கு நல்லது செய்யானும்னா! எதுவேனாலும் செய்யாலாம்.. எதற்காக? எப்படி செய்யப்படுகிறது? என்பதுதான் நீ! ஒரு நாயகன்.

மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாக இலங்கையில் பிறந்து அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின்னர் கும்பகோணத்தில் வாழ்ந்து வந்தார். குடும்பச் சூல்நிலையின் காரணமாக தனது படிப்பை மூன்றாம் வகுப்பிலே நிறுத்திவிட்ட இவர் அண்ணனுடன் நாடகத்தில் சேர்ந்தார். பிறகு இவரில் அயராத உழைப்பால் திரைபடதுரையில் 1936ல் சதிலீலாவதி படத்தின் மூலம் அறிமுகமாகி 1978 வரை மதுரைமீட்ட சுந்தரபாண்டியன் படம் வரைக்கும் கொடிக்கட்டி பறந்தார்.

இவர் ஒரு மலையாளியாக இருந்தும் தமிழ் தேசியத்தில் இணைந்தவராகவும், திராவிட முன்னேற்ற கழக முக்கிய உறுப்பினராகவும், அக்கட்சியின் பொருளராகவும் நீண்டகாலம் பணியாற்றினார். அறிஞர் அண்ணாவின் மறைவிற்க்கு பின் டாகடர் கலைஞர் முதலமைச்சரானார்., அதன் பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக MGR தனிக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்1972ல் ஆரம்பித்து அதில் பெருவாரியாக வெற்றியும் பெற்று 1977ல் முதலமைச்சரானார். 1984ல் இவர் கடுமையான நோய்வாய் பட்டும் 1987 வரை சாகும்வரை முதலமைச்சராய் 10 ஆண்டுகள் இருந்தார். இவர் மறைவிற்குபின் பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது.


இவர் சிறுவயது முதல் இவர் குடும்பம் சாப்பாட்டுக்கே இல்லாமல் வறுமையில் வாடியது. இவர் வாழ்க்கையில் துண்பங்கள் எண்ணில்லடங்காதது. இதன் காரணமாக இவர் வாழ்நாளெல்லாம் ஏழைகளின் தொண்டனாகவே வாழ்ந்தார். இவர் முதலமைச்சராக உள்ள காலத்தில் ஏழ்மையை கருத்தில் கொண்டே திட்டங்கள் தீட்டினார். சத்துணவு திட்டம் இவரின் கனவு திட்டமாக இருந்தது. சத்துணவுக்காண நிதியில்லா நிலையிலும் அரசு ஆடம்பரங்களை குறைத்துக்கொண்டு தொடர்ந்து நடத்தினார்.

திட்டங்களை தீட்டுவதுடன் நின்றுவிடாமல், திட்டம் செயல்படுத்துவதில் வல்லமையுள்ளவர். தன்னுடன் பணிபுரியும் அதிகாரியுடன் மரியாதையாகவும், கண்டிப்பும் கொண்டவர்.

மூன்றாம் வகுப்பு வறை படித்தாலும், தனிதிறமையால் தமிழும் ஆங்கிலமும் வல்லமை பெற்று காணப்பட்டவர்.

இவர் காவல்த்துறை தன் பொறுப்பில் வைத்திருந்தார். காவல் துறையினர் முறைகேடாக பயன்படுத்தி வந்த சந்தேகதுடன் கைது செய்தல் விலக்கிக்கொள்ளப்பட்டது. மிதிவண்டியில் இருவர் செல்வதை அனுமதிக்கப்பட்டது.

இவர் காலத்திட்டங்களில் எனக்கு மிகவும் பிடித்தது கிராமந்தோரும் பேருந்து வசதி கொடுக்கப்பட்டது. குடிசைகளூக்கு இலவச ஒரு மின்விளக்கு திட்டம் வழங்கியது. இது அந்த சூழ்நிலையில் தெவையான திட்டமாக நான் கருதுகின்றேன். இந்த திட்டங்களின் செயல்பாடும், விரைவு தன்மையும் இன்றுவரை நான் பார்க்கவில்லை. இன்னும் இந்ததிட்டங்கள் செயல்வடிவில் இருக்கின்றது என்பதும் இதன் தனிசிறப்பு.

தீண்டாமை கொடுமைக்கு சட்டம் கடிமையாக்கப்பட்டது. தாழ்த்தபட்ட பிரிவினர்களுக்கு வசதி மேன்படுத்துதல். அரிசியின் விலை கட்டுப்படுத்துதல், மேலும் அரிசியின் விலை எல்லா மாவட்டங்களுக்கும் நிலைப்படுத்துதல். மாவட்டதொரும் உள்ள அரிசி நெல் தடுப்பு சாவுடிகளை நிக்கி சமநிலை படுத்தப்பட்டது.. இதனால் சிலப்பகுதி மட்டும் பஞ்சம் என்ற நிலை மாறியது. இப்படி ஏழைப்பங்காளியாக இவர் செயல்ப்பட்டார் என்று சொல்லிக்கொண்டே பொகலாம்..

"நான் முதல் மந்திரியாக இருந்தாலும் மக்கள் சேவகன். மக்கள் வாழ்வே என் வாழ்வு" இது எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக ஆன பிறகு, அவர் சொன்ன வார்த்தைகளும், எண்ணமும் இது தான்.

அதிகாரிகளிடமும், பத்திரிகை நிருபரிடமும் பாசதுடன் பழகுவார். எல்லோரையும் சார் சார் என்று அழைப்பார்.. தனகுண்டான மனகுறை வெளிகாட்டமாட்டார், எப்பொழுதும் புன்சிரிப்புடன் காணப்பட்ட பொன்மனச்செம்மல் டாக்டர் MGR. இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திக கொள்கையுள்ளவராயிருந்தும்,இவரை மக்கள் கடவுளாகவே கருதினர். தன் தாயின் மேல் கொண்ட அன்பின் காரணமாக தன் தாய்க்கு கொயில் கட்டி வணங்கியவர் புரட்சி தலைவர்.

இப்படி எல்லா வகையிலும் தலைவன் என்ற தகுதிக்கு தன்னை தயார்ப்படுத்தி கொண்டார் மக்கள் தலைவன். தான்மட்டுமில்லாது தன்னுடன் இருக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் அறிவுரைகள் வழங்குவார் " எல்லாம் நம் கையில் இல்லை மக்கள் கையில் தான் இருக்கிறது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று நினைத்து கொண்டு இருந்தால் போதாது மக்கள் மனதில் குடிபோக வேண்டும். அவர்கள் நாம் எப்போதும் சந்தித்து கொண்டே இருக்கணும். இந்த கட்சிக்கு நீங்கள் எல்லாம் எப்படி என்னை தலைவராக தேர்ந்து எடுத்துள்ளீர்களோ! அதே போல் தான் நாம்மை அனைவரையும் மந்திரிகளாக இருந்து ஆட்சி நடத்த மக்கள் தேர்ந்து எடுத்து உள்ளார்கள். நான் சினிமாவில் புகழ் அடைந்தேன் என்றால் அது மக்களால்தான். நான் அப்பவே மக்களுக்கு நண்பன் ஆகிவிட்டேன். நான் இப்போ ஒரு பெரிய அளவில் வளர்ந்து உள்ள அரசியல் கட்சிக்கு தலைவனாகவும் தமிழ்நாட்டுக்கு முதல் அமைச்சராகவும் இருக்க முடிந்தது. அதனாலே நாம் எல்லாம் மக்கள் மனதில் இருக்கனும்."
இது முக்கியமாக மற்ற மந்திரிகளுக்கும் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கும் மக்கள் திலகம் அடிக்கடி சொல்லும் அறிவுரைகள்.

இவற்றையெல்லாம் நாம் பார்க்கும்பொது, புரட்சித்தலைவர் டாக்டர்
எம். ஜி. இராமச்சந்திரன் ஒரு நாயகன்தான். நீ! ஒரு நாயகன்.......




பொன்மனசெம்மல்


நடிகர் திலகம் சிவாசி கணேசனுடன் MGR



AVM சரவணனுடன் MGR



கிருபாணந்தா வாரியாருடன் MGR



தனது நண்பர் டாக்டர் கலைஞருடன் MGR..


நரிக்குறவர்களுடன் MGR. "ஒளிவிளக்கு" எனற திரைப்படத்தில் நரிகுறவன் வேடம் கொண்டு நடித்து அவர்களின் மனங்களில் இடம் பிடித்தவர்.. தனது ஆட்சிக் காலத்தில் செய்ய தவறிய ஒன்று இவர்களை பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலிருந்து தாழ்த்தப்பட்ட பிரிவுக்கு மாற்றாமல் விட்டது.



இரும்பு மனிதர் ராஜாஜியுடன் MGR

சகலகலா வல்லவர் MGR இவர் நடிகர் என்றாலும் எல்லா துறைகளிலும் திரண் கொண்டவராக இருந்தார். இவர் இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தனது சத்துணவு திட்டத்தின் முன்னோடி காமராஜ் அவர்களுடன் MGR


டாகடர் கலைஞருடன் MGR


நகைசுவை மன்னன் நாகேஷ் அவர்களின் திரையரங்கம் திறப்பு விழாவில் MGR



அறிஞர் அண்ணாவுடன் MGR



கவிஞர் கண்ணதாசனுடன் MGR


சந்திர பாபுவுடன் MGR

நாகேஷ் மற்றும் அசோகனுடன் MGR



இந்திரா காந்தியுடன் MGR மத்திய அரசுடன் நல்ல இணக்கம் கொண்டவர்.


விடுதலை புலிகளின் தலைவன் வேலைப்பிள்ளை பிரபாகரனின் சந்திப்பு



மக்கள் கலைஞன் MGR


பெரியாருடன் MGR



மூத்த நடிகர், இயக்குனர் சாந்தா ராம் (ஹிந்தி) அவர்களுடன் MGR தமிழக அரசியலில் காலில் விழும் கலாச்சரம் இவர் மூலம்தான் ஆரம்பமாகி இருக்கலாம். செல்வி ஜெயலலிதா அவர்கள் இதில் கொடிக்கட்டி பறப்பவர்.



போப்வுடன் MGR இவர் ஒரு நாத்திகராக இருந்தாலும் மதத்தலைவர்களுக்கு மரியாதைக் கொடுப்பவர்.



சாண்டோ சின்னப்பத்தேவருடன் MGR


முப்பெரும் தலைவர்கள் நெடுஞ்செழியன், கலைஞர் மற்றும் MGR



அறிஞர் அண்ணாவுடன் சீடர்கள்....



NT ராமாராவ் வுடன் MGR